Connect with us

செஸ் விளையாட்டின் அடுத்த பிரம்மாண்டம் : சென்னையில் டிச.15 முதல் ஆரம்மபாக்கிறது செஸ் சாம்பியன்ஷிப் போட்டி..!!

Featured

செஸ் விளையாட்டின் அடுத்த பிரம்மாண்டம் : சென்னையில் டிச.15 முதல் ஆரம்மபாக்கிறது செஸ் சாம்பியன்ஷிப் போட்டி..!!

சென்னையில் டிச.15 முதல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரில் கடந்த ஆண்டு 44 வது செஸ் ஒலிம்பியாட்போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது . இந்த போட்டியில் தமிழக வீரர்கள் பலரும் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர் .

பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த போட்டியை உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பலரும் பாராட்டினர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாபெரும் செஸ் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னையில் டிச.15 முதல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

உலகநாட்டில் உள்ள திறமை வாழ்ந்த பல வீரர்கள் பங்கேற்கப்போகும் இந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

நடப்பாண்டுக்கான இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இம்மாதம் 15 – 21ம் தேதி வரை சென்னை லீலா பேலஸில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இப்போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டியின் மொத்த பரிசுத்தொகையாக 50 லட்சம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top