Connect with us

நான் கஷ்டத்தில் இருந்த போது எனக்கு உதவிய தனுஷ் – கண்கலங்கிய ரோபோ ஷங்கர்..

Featured

நான் கஷ்டத்தில் இருந்த போது எனக்கு உதவிய தனுஷ் – கண்கலங்கிய ரோபோ ஷங்கர்..

விஜய் டிவியின் ‘கலகப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ ஷங்கர். இன்று வெள்ளித்திரையில் முக்கிய நடிகராக வளர்ந்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில், ஒரு பேட்டியில் அவர் நடிகர் தனுஷ் குறித்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. “நான் கஷ்டத்தில் இருந்த போது, மனதளவிலும், மனிதநேயத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகர் தனுஷ். கொரோனா காலத்தில் நானும் என் குடும்பமும் கடுமையான பொருளாதார சிரமத்தை சந்தித்தோம்.

அந்த நேரத்தில், தனுஷ் எனக்கு பெரிய அளவில் பண உதவி செய்தார்,” என்று ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top