Connect with us

சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

சூர்யாவின் 45வது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் தொடர்ந்து டாப் 5 இடத்தில் இருப்பவர் நடிகர் சூர்யா . இவரது நடிப்பில் தற்போது அவரது 44ஆவது திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் சூர்யாவின் 45வது படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top