Connect with us

ஆர்த்திக்காக கையை அறுத்த ரவி மோகன்… அந்த காதல் இப்போது எங்கே? – பிரபலத்தின் கேள்வி!

Featured

ஆர்த்திக்காக கையை அறுத்த ரவி மோகன்… அந்த காதல் இப்போது எங்கே? – பிரபலத்தின் கேள்வி!

கடந்த ஆண்டு தனது திருமண வாழ்க்கை முடிவடைந்தது என அறிவித்த நடிகர் ரவி மோகன், தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தனது தோழி கெனிஷாவுடன் ஒரு நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்தது விமர்சனங்களை மேலும் அதிகரிக்கச் செய்தது. அதற்குப் பிறகு அவர் வெளியிட்ட விளக்கமும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட கருத்துகள் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

அவர் கூறியது இதுதான்: “ரவி மோகன் தனது மகன்களுக்கு விபத்து நடந்தது குறித்து தெரியாது என கூறுகிறார். ஒரு அப்பாவாக இப்படிச் சொல்ல வேண்டும் என்றால், அவருக்கே வெட்கமாக இருக்க வேண்டிய விஷயம். ஆர்த்தியும் குழந்தைகளும் சென்னையில்தான் இருக்கிறார்கள். அவர்கள் லண்டனில் இல்லை. ரவி தனது மகன்களை சந்திக்க செல்லலாம். ஆனால் அவர் செல்லவில்லை.”

“அவரை யார் தடுத்தார்கள்? போனால் ஆர்த்தி அடிக்கப்போறாரா? இல்லை அவருடைய அம்மாவா பிடித்துக் கொள்கிறார்? யாரும் அப்படி செய்ய மாட்டார்கள். அவர் போகவில்லை.” “ஆர்த்தியின் அம்மா ரவியைவிட கோடீஸ்வரி. ஆர்த்தி லண்டனில் படித்தவர். இருவரும் ஒரு காலத்தில் காதலிக்கத் தொடங்கினார்கள். திருமணம் செய்ய ரவி முடிவு செய்தார். ஆனால் அவரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதனால் மனமுடைந்து, ரவி கையை அறுத்துக் கொண்டார்.”

“இப்படி காதலித்த ரவி மோகன் இன்று என்ன நிலைக்கு வந்துள்ளார்?” “வாழ்க்கையில் எத்தனை பேரிடம் காதல் வந்தாலும், வாழ்க்கை என்றால் மனைவியுடன்தான். இதை ரவி எப்போது புரிந்து கொள்கிறாரோ, அப்போது தான் அவர் மனிதனாக இருப்பார்.”

“கெனிஷா வசியம் போட்டு ரவியை மாட்ட வைத்துள்ளார். இது எல்லாருக்கும் தெரியும். அவர் தொடர்ந்து கெனிஷாவுடன் இருப்பார் என்றால், அவரது படங்கள் தோல்வியை சந்திக்கும்.” “மகன்கள், மகன்கள் என்று அறிக்கைகள் விடுகிறார். ஆனால் அவர் உண்மையில் என்ன செய்தார்? அவர்களைப் பார்க்க முயற்சி செய்தாரா?” “யார் அவரைத் தடுத்தார்கள்? எங்காவது அதற்கு சாட்சியாக சண்டை, வாதம் நடந்ததா? அவர் போய் அழைத்தால் மகன்கள் வரமாட்டார்களா?”

“இனி யாராவது ஹீலர் என்று சொல்லி பெண்கள் வந்தால், மக்கள் அவர்களையும் கெனிஷா என்று தான் பார்ப்பார்கள்.” இதுபோல கடுமையான விமர்சனங்களை பயில்வான் ரங்கநாதன் முன்வைத்துள்ளார். இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய சந்தானம் – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

More in Featured

To Top