Connect with us

இந்தியா கூட்டணியில் அடுத்த விரிசல்.. பாஜகவோடு கூட்டு சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம்

RLD_BJP_Alliance

Politics

இந்தியா கூட்டணியில் அடுத்த விரிசல்.. பாஜகவோடு கூட்டு சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம்

2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக்தளம் (ஆர்எல்டி) கூட்டணியை உறுதி செய்துள்ளது.

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தின்படி, பாக்பத் மற்றும் பிஜ்னோர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் ஆர்எல்டி போட்டியிட உள்ளது. அக்கட்சிக்கு ராஜ்யசபா தொகுதியை வழங்கவும் பாஜக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஆர்எல்டி அந்த கூட்டணியிலிருந்து விலகிதான் தற்போது பாஜகவுடன் சேர்ந்துள்ளது. இதனால் இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாஜகவுடன் கூட்டணி குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெயந்த் சவுத்ரி, பிரதமர் நரேந்திர மோடி தேசத்தின் துடிப்பை புரிந்து கொண்டுள்ளார் என்று கூறினார். இது வரை எந்த கட்சியும் செய்ய முடியாததை மோடியின் தொலைநோக்கு பார்வையால் பாஜக செய்துள்ளது என்றார்.

ஆர்எல்டி கட்சியைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசத்தில், குறிப்பாக ஜாட் ஆதிக்கப் பகுதியில் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜாட் பிரச்சினையைத் தவிர, விவசாயிகளின் போராட்டம் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பின்னடைவை சந்தித்துள்ள பாஜகவுக்கு இந்த கூட்டணி வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் சரண் சிங் இந்த ஜெயந்த் சவுத்ரியின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சில தினங்களுக்கு முன்பு சரண் சிங்கிற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

More in Politics

To Top