Connect with us

“முன்னாள் பிரதமர்களுக்கு பாரத ரத்னா விருது” – மகிழ்ச்சி தெரிவித்த TTV தினகரன்

Featured

“முன்னாள் பிரதமர்களுக்கு பாரத ரத்னா விருது” – மகிழ்ச்சி தெரிவித்த TTV தினகரன்

இந்தியாவின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்ட முன்னாள் பிரதமர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய பெருமை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களையே சாரும்.

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக ஏற்கனவே பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசண் ஆகிய விருதுகளை பெற்றிருக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாரத ரத்னா விருது கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான திரு.எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங் மற்றும் நரசிம்மராவ் ஆகிய மூவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top