Connect with us

“10 நாட்களில் ரன்பிர் கபூரின் Animal படம் செய்த வசூல் இத்தனை கோடிகளா?!”

Cinema News

“10 நாட்களில் ரன்பிர் கபூரின் Animal படம் செய்த வசூல் இத்தனை கோடிகளா?!”

ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘Animal’ திரைப்படம் 10 நாட்களில் ரூ. 717 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘Animal’ படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ரீதம், விஷால் மிஸ்ரா, மனன் பரத்வாஜ், ஷ்ரேயாஸ் பூரணிக், ஜானி, ஆஷிம் கெம்சன் உள்ளிட்டோர் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். தந்தை – மகன் உறவைப் பேசும் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. அதேபோல் படம் வெளியான 6 நாட்களில் 500 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவிழா இல்லாத நாட்களில் படம் அதிகபட்ச வசூலை குவித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், உலகம் முழுவதும் படம் ரூ. 717.46 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top