Connect with us

‘ராயன்’ படத்தின் ட்ரெய்லர் எப்போது தெரியுமா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

‘ராயன்’ படத்தின் ட்ரெய்லர் எப்போது தெரியுமா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘ராயன்’ படத்தின் ட்ரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கலக்கல் நாயகனாக தொடங்கி இன்று ஹாலிவுட் வரை தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துள்ள நடிகர் தனுஷின் நடிப்பில் தற்போது பல படங்கள் பல மொழிகளில் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றன.

இதில் நடிகர் தனுஷின் 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது .

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பை ராயன் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் ட்ரெய்லர் வரும் 16ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோவையை கலக்கிய த்ரிஷா! சிவப்பு நிற சேலையில் தேவதையாக ஜொலித்த நடிகை.. ரசிகர்கள் வெள்ளத்தில் திணறிய சாலைகள்!

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top