Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் வினேஷ் போகத்..!!

Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் வினேஷ் போகத்..!!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற மல்யுத்தம் போட்டியில் உலகின் நம்பர் 1 நிலையில் இருந்த ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாதனை படைத்ததுடன் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விளையாடினார் .

இந்த மல்யுத்த போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பான் நாட்டைச் சர்ந்த யூ சுசாகியை எதிர்கொண்ட வினேஷ் போகத் 3 – 2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற போட்டியில் உக்ரைன் வீராங்கனையை எதிர்கொண்ட வினேஷ் போகத் அவரையும் வீழ்த்தி தற்போது அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

நடப்பு ஒலிம்பிக் தொடரில் அபாரமாக விளையாடி படிப்படியாக பாதிக்கத்தை நோக்கி முன்னேறி வரும் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நிச்சயம் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மம்மூட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

More in Featured

To Top