Connect with us

பையா 2 கதை ரெடி – இயக்குநர் லிங்குசாமி கொடுத்த டக்கர் அப்டேட்..!!!

Cinema News

பையா 2 கதை ரெடி – இயக்குநர் லிங்குசாமி கொடுத்த டக்கர் அப்டேட்..!!!

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பையா 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.

கார்த்தி ,மற்றும் தமன்னா நடிப்பில் 2010-ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படமே ‘பையா’ . இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வந்த நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இதையடுத்து கார்த்தி அடுத்தடுத்த படங்களில் ஹிட் கொடுக்க தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படம் இம்மாதம் 11 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் பையா 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ளார்.

பையா 2 படத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன். தோற்றத்தில் ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டதால், பையா கதாபாத்திரத்தை மீண்டும் பண்ண வேண்டுமா என யோசிக்கிறார்.

‘பையா 2’ படத்தில் கார்த்தி சார் நடிக்கவில்லை என்றால் வேறு ஒரு ஹீரோவை வைத்து படமாக்கும் விதமாகத்தான் அதை எழுதியுள்ளேன். ஆனால் ‘பையா 2’விலும் கார் இருக்கும். ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள்” என லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top