Connect with us

எம்மாடியோ : பேட்டிங்கில் மிரளவைத்த கொல்கத்தா அணி – டெல்லி அணிக்கு 273 ரன்கள் இலக்கு..!!!

Featured

எம்மாடியோ : பேட்டிங்கில் மிரளவைத்த கொல்கத்தா அணி – டெல்லி அணிக்கு 273 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தனது அபார ஆட்டத்தால் டெல்லி அணி அணிக்கு 273 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது .

அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் – ஃபில் சால்ட் களமிறங்கினர் . இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த சால்ட் 18 ரன்களில் அவுட்டானார் . அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி – சுனில் நரைனுடன் இணைந்து டெல்லி பந்துகளை நாலாபுறமும் விளாசினர்.

தனது அபார ஆட்டத்தால் 85 ரன்களை குவித்த சுனில் 13ஆவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் வெளியேறினார்.

இதையடுத்து ரஸ்ஸல் – ஸ்ரேயஸ் சிறப்பான பாட்னர்ஷிப் அமைக்க, அதிரடியில் மிரட்டினார் ரஸ்ஸல் . மறுபுறம் அதிரடி காட்ட தொடங்கிய 18 ரன்களில் வெளியேற பின்னர் வந்த ரின்கு சிங் வந்த வேகத்தில் 3 சிக்சர்களை விளாசி 28 ரன்களுடன் நடையைக்கட்டினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 272 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 273 ரன்களை சேர்ந்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் வாணவேடிக்கை நடத்திய கொல்கத்தா அணி - பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு..!!

More in Featured

To Top