Connect with us

கள்ளத்தனமாக பாஜக கூட்டணியில் இருக்கும் இ.பி.எஸ் – திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை

Featured

கள்ளத்தனமாக பாஜக கூட்டணியில் இருக்கும் இ.பி.எஸ் – திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை

ஓ.பி.எஸ். நேரடியாக பாஜக கூட்டணியில் சேர, எடப்பாடி பழனிசாமி கள்ளத்தனமாக அந்த கூட்டணியில் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது : .

“பேரிடர் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஆண்டுதோறும் வழங்கக்கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டு, வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுத்தோம் என்று கூறுவது கரகாட்டக்காரன் படத்தில் வரும் அதுதான் இது என்ற வாழைப்பழ காமெடியை நினைவூட்டுகிறது”

“ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் என நாடகம் நடத்த, கூவத்தூர் கவனிப்புகளால், தரையில் ஊர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்

பிறகு ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்கு பரப்புரை செய்தார். பிறகு ஓ.பி.எஸ். உடன் சேர்ந்து டிடிவி தினகரனுக்கு எதிராக பரப்புரை செய்தார்

அடுத்ததாக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாட்டர் பாட்டில் மரியாதை அளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். நேரடியாக பாஜக கூட்டணியில் சேர, எடப்பாடி பழனிசாமி கள்ளத்தனமாக அந்த கூட்டணியில் இருக்கிறார்.

இவர்கள் அனைவருமே தமிழ்நாடு மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்”

ஆளுங்கட்சியாக இருக்கும் போது, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக பாஜகவை எதிர்ப்பதாக பேசுவார். மக்களால் புறக்கணிக்கப்பட்டு எதிர்க்கட்சியான பிறகு, எதிர்க்கட்சி ஏன் பாஜக அரசை எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுவார்”

பக்தர்கள் போற்றும் அரசாகவும், அற்பர்கள் கதறும் அரசாகவும் திமுக அரசு இருக்கிறது . 5000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை மீட்டுள்ளோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது

பழம்பெரும் 112 கோயில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடத்தப்படுகின்றன. இறைவனின் கோயிலில் சமத்துவம் இருக்க வேண்டும் என அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை கொண்டுவந்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும் - திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!

More in Featured

To Top