Connect with us

எங்க ஆதரவு திமுக கூட்டணிக்கு தான் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கருணாஸ்..!!

Featured

எங்க ஆதரவு திமுக கூட்டணிக்கு தான் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கருணாஸ்..!!

நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவருமான கருணாஸ் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் ஆதரவு திமுக கூட்டணிக்கு தான் என தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் கூறியதாவது :

முதல்வர் ஸ்டாலின் உடனான சந்தித்து சிறப்பாக இவர்ந்து . அவருடன் 5 கோரிக்கைகளை முன்வைத்து முக்குலத்தோர் புலிப்படை திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துளேன்.

சனாதனத்தை வீழ்த்தி சமூக நீதி காக்க திமுகவை முக்குலத்தோர் புலிப்படை நிச்சயம் ஆதரிக்கும் . அவர்களுக்காக பிரச்சாரங்களில் ஈடுபடவும் தயாராக உள்ளோம் .

பாசிச சனாதன சக்தியான பாஜகவை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட ஓரணியில் சேர வேண்டி உள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட பரிந்துரைக்க வேண்டும்; பசும்பொன் தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அத்துமீறும் இலங்கை கடற்படை - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

More in Featured

To Top