Connect with us

உலகளவில் ட்ரெண்டாகும் தனுஷின் கேப்டன் மில்லர் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிபால OTT நிறுவனம்..!!

Cinema News

உலகளவில் ட்ரெண்டாகும் தனுஷின் கேப்டன் மில்லர் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிபால OTT நிறுவனம்..!!

தனுஷின் நடிப்பில் திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட கேப்டன் மில்லர் திரைப்படம் OTT தளத்திலும் உலகளவில் ட்ரெண்டாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் செம மாஸாக உருவான திரைப்படம் படம் கேப்டன் மில்லர்.

மிக பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் குளோபல் ஸ்டார் தனுஷுடன் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் டாப்பு டக்கராக தயாராகி உள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக உருவெடுத்தது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் தற்போது 14 நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம்பிடித்து அசத்தலான சாதனையை படைத்துள்ளது.

இதுமட்டுமின்றி இந்தியா உட்பட 9 நாடுகளில் கேப்டன் மில்லர் படம் நம்பர் 1 இடத்தைப் பிடித்து அசத்தி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top