Connect with us

ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் – ஆனந்த கண்ணீரில் படக்குழு..!!

Cinema News

ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் – ஆனந்த கண்ணீரில் படக்குழு..!!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பார்க்கிங்’ படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக படக்குழு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இவரது நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் பார்க்கிங் திரைப்படம் வெளியானது .

அறிமுக இயக்குநரான ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடத்தியுள்ளனர்.

திரையரங்குகளில் பட்டய கிளப்பிய இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இந்நிலையில் ரசிகர்கள் கொண்டாடிய ‘பார்க்கிங்’ படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக படக்குழு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதையை தனது நூலகத்தில் வைப்பதற்காக ஆஸ்கர் அகாடமி கேட்டுள்ளதாக படக்குழு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது . இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது X தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண் ‘ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடிப் போகும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி..!!

More in Cinema News

To Top