Connect with us

90 முறை பிரதமர் தமிழகம் வந்தாலும் பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது..!!!

Featured

90 முறை பிரதமர் தமிழகம் வந்தாலும் பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது..!!!

ஒருமுறை இருமுறை அல்ல 90 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தாலும் பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார் . அப்போது பேசிய அவர் கூறியதாவது :

40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என்பதால் பிரதமர் மோடி 9 முறை தமிழ்நாடு வருகின்றார்; ஒருமுறை இருமுறை அல்ல 90 முறை வரட்டும்; என்ன பாடுபட்டாலும் இந்த முறை ஆட்சிக்கு வர முடியாது; இதற்கு தமிழகம் முன்னுதாரணமாக இருக்கும்.

பாஜகவில் உள்ள அனைத்து தலைவர்களும் தமிழம் வந்து ஒன்றாக வாக்கு கேட்டாலும் பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது .

இந்தியாவின் முதல் எதிரி மோடி என்று பகிரங்கமாக சொல்கிறேன் இதற்காக என் மீது வேண்டுமென்றால் வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள்.

மூன்று முறை வெள்ளம் வந்து தமிழ்நாடு மிதந்த போதும், கொரோனாவால் பல்லாயிரம் உயிர்கள் இழந்த போதும் வராத பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு 9 முறை வந்துவிட்டார்.

பிரதமர் மோடி கண்ணியமாக பேச வேண்டும். மாறாக தமிழக மக்கள் புண்படும் வகையில் பேசி வருகிறார். நடுநிலையாக பேசாமல் கடுமையாக பேசி வருகிறார்.

தமிழர், வளம், இனம், பண்பாட்டை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என வைகோ தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது ஸ்டார்லைனர் விண்கலம்..!!

More in Featured

To Top