Connect with us

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” – ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

Featured

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” – ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

கடந்த மாதம் திரையரங்கில் வெளியான “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படம் ஓடிடி ரிலீசாக வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநரும் நடிகருமான தனுஷின் இயக்கத்தில் மூன்றாவது படம் இது. இசை ஜி.வி. பிரகாஷ். மேலும் தனுஷின் அக்கா மகன் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், திரையில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” தற்போது ஓடிடியில் வெளியவிருக்கும். இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான தனுஷ், “NEEK” திரைப்படம் வருகிற 21ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்க்கலாம், இப்படத்திற்கு ஓடிடியில் எவ்வளவு வரவேற்பு கிடைக்கப்போகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top