Connect with us

வடிவேலுவை நடிக்க வேண்டாம் என்று கூறி விரட்டிவிட்ட பாரதிராஜா.. உண்மை தெரியுமா?

Featured

வடிவேலுவை நடிக்க வேண்டாம் என்று கூறி விரட்டிவிட்ட பாரதிராஜா.. உண்மை தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையில் சிரிக்கவே பலர் மறந்துவிட்டார்கள். நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைப்பது ஒரு கலை. அந்தக் கலையை சரியாக செய்து மக்களை சிரிக்க வைத்து வருபவர் தான் நடிகர் வடிவேலு. மற்றவர்களை கேலி செய்வது, டபுள் மீனிங் பேசி சிரிக்க வைப்பது, இதுபோன்று செய்யாமல் தன்னுடைய காமெடி காட்சிகளில் தன்னையே கலாய்த்துக்கொண்டு நடிப்பார்.

அசுர வளர்ச்சியை கண்ட வடிவேலு கைவசம் தற்போது கேங்கர்ஸ், மாரீசன் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், கிழக்கு சீமையிலே படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் கேட்டு முரண்டு பிடித்ததாக வடிவேலுவை இயக்குநர் பாரதிராஜா விரட்டிவிட்டதாக தயாரிப்பாளர் கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வடிவேலு சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று கிழக்கு சீமையிலே. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். இந்த படத்தில் நடிக்க ரூ.25 ஆயிரம் சம்பளம் வேண்டும் என வடிவேலு கேட்டாராம்.

இதனால் கடுப்பான பாரதிராஜா, “நீ நடிக்கவே வேண்டாம்” என்று கூறியுள்ளார். அப்போது அங்கிருந்து கண்ணீருடன் சென்றிருக்கிறார் வடிவேலு. இதை கண்ட தயாரிப்பாளர் தாணு, வடிவேலுவை ஆறுதல்படுத்தி, அவர் கேட்ட ரூ.25 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து அனுப்பி வைத்தாராம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலக நடன தினம்: மஞ்சு வாரியர் குச்சிப்புடி வீடியோ வைரல்!

More in Featured

To Top