Connect with us

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: நடிகர் மாதவன் வெளியிட்ட பதிவு..

Featured

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: நடிகர் மாதவன் வெளியிட்ட பதிவு..

சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமி திரும்பினார். சூழ்நிலை காரணமாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழு விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களில், விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் இவர்கள் பூமிக்கு திரும்பினார். 17 மணி நேர பயணத்திற்கு பிறகு, அவர்கள் பாதுகாப்பாக பூமியில் இறங்கினர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில், டிராகன் விண்கலம் பத்திரமாக இறங்கியது. அதன் பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவின் 4 உறுப்பினர்கள் வெளியே வந்தனர், மகிழ்ச்சியுடன் கையசைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விண்கலத்தில் இருந்து வெளியே வந்த 4 பேரும் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவ பரிசோதனையின் பின், சுனிதா வில்லியம்ஸ் ஆரோக்கியமாக இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியதை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதில், நடிகர் மாதவன், சுனிதா வில்லியம்ஸ் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டூரிஸ்ட் ஃபேமிலி: முதல் விமர்சனத்தில் எப்படி இருக்கிறது படம்?

More in Featured

To Top