Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ” ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா..!!

Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ” ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா..!!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் வெறித்தனமாக ஈட்டி எறிந்த இந்தியாவின் ‘தங்கமகனான நீரஜ் சோப்ரா நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது .

உலககெங்கும் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் இம்முறை மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

இதில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர் .

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டி இன்று நடைபெற்றது .

இந்த தகுதி சுற்றில் 84 மீ தூரம் மேல் ஈட்டி எறிந்தாலே நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியும் என அறிவிக்கப்பட்டது . இந்த போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் தங்க மகனான நீராஜ் சோப்ரா 89.34 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

கடந்த ஒலிம்பிக் தொடரை போலவே இந்த தொடரிலும் நீராஜ் சோப்ரா தங்க வெல்வார் என எதிர்பார்க்கப்படம் நிலையில் தகுதி சுற்றுலேயே நீராஜ் அபாரமாக ஈட்டி எறிந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் OTT தளங்களில் இந்த வாரம் புதிய படங்கள் வெளியீடு – ரசிகர்களுக்கு வீட்டு திரையரங்க அனுபவம்!

More in Featured

To Top