Connect with us

“ரஜினி சாருக்கு என் அரசியல் ரொம்ப பிடிக்கும்” – இயக்குநர் பா.ரஞ்சித் உருக்கம்..!!

Cinema News

“ரஜினி சாருக்கு என் அரசியல் ரொம்ப பிடிக்கும்” – இயக்குநர் பா.ரஞ்சித் உருக்கம்..!!

புரட்சி இயக்குநர் பா. ரஞ்சித் திரையுலகில் கடந்து வந்த பாதை குறித்து பேசியிருப்பது பார்வையையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சீயான் விக்ரம் நடிப்பில் ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படம் வரும் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது பேசிய பா.ரஞ்சித் கூறியதாவது :

தங்கலான் படத்தில் விக்ரம் அவர்களை ஓவரா கொடுமை படுத்திட்டேன். ரொம்ப பயங்கரமான கலைஞனா இருக்காரு.

திரையுலகில் எனது பயத்தை போக்கியது வெங்கட் பிரபு சார் தான் . ஒரு சொல்லப்படாத கதையை கொண்டாட்டத்தின் மூலம் சொல்லும்போது பார்வையாளர்களுடன் நம்மால் சுலபமாக நெருங்கமுடியும் என்பதை ‘சென்னை 28’ மூலம் தெரிந்துகொண்டேன்…அப்படிதான் ‘அட்டகத்தி’ உருவானது

நான் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் ரஜினி சாருக்கு ரொம்ப பிடிக்கும். மெட்ராஸ் பிடித்ததால்தான் கபாலி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கினார். என்னுடைய அரசியல் அவருக்கு ரொம்ப பிடிக்கும். ‘கபாலி’ வெற்றியடைந்த பின் ‘காலா’ வாய்ப்பு கொடுத்தார்.

தங்கலான் எனக்குமட்டுமல்ல தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக படமாக மாறும் அனைவரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளோம் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top