Connect with us

பிரபல நடிகருக்கு அக்காவாக நடிக்க போகும் நயன்தாரா – யார் அந்த நடிகர் தெரியுமா..?

Cinema News

பிரபல நடிகருக்கு அக்காவாக நடிக்க போகும் நயன்தாரா – யார் அந்த நடிகர் தெரியுமா..?

இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வருகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் குறித்து சூப்பர் டூப்பர் தகவல் ஓன்று வெளியாகியுள்ளது. தனது காதல் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் தான் நடிகை நயன்தாரா நடிக்க போகிறாராம் அதுவும் ஹீரோவின் அக்காவாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது .

இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டான லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரதீப்பின் அக்காவாக நடிக்க நயந்தாரா ஒப்புக்கொண்டதாகவும் இந்த படத்தில் நயன்தாராவுக்கும் முக்கிய காட்சிகள் ஏராளமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் தற்போது வெளியான அத்தகவல் அனைத்தும் உண்மையா இல்லையா என்பதை நாம் படக்குழுவிடம் இருந்து வரும் அதிகாரபூர்வ அறிவிப்பில் தான் தெரிந்துகொள்ள முடியும் . ஒருவேளை இந்த படத்தில் பிரதீபுக்கு அக்காவாக நயன்தாரா உண்மையாகவே நடித்தால் எப்படி இருக்கும் என்பதை கமென்டில் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பட்ட அடிக்கு பழிதீர்க்குமா CSK..? சேப்பாக்கத்தில் இன்று சென்னை - லக்னோ அணிகள் மோதல்..!!

More in Cinema News

To Top