Connect with us

தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி டன் கணக்கில் கடத்தப்பட்ட வெடி பொருட்கள் – வேதனை தெரிவித்த நாரயணன் திருப்பதி

Featured

தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி டன் கணக்கில் கடத்தப்பட்ட வெடி பொருட்கள் – வேதனை தெரிவித்த நாரயணன் திருப்பதி

தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி சென்ற லாரியில் இருந்து 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பறிமுதல் செய்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தமிழக பாஜக துணை தலைவர் நாரயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாரயணன் திருப்பதி விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

நேற்று அதிகாலை, தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியில் மறைத்து வைத்திருந்த மரப்பெட்டிகளில் 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை மீட்டுள்ளது சேலம் காவல்துறை. இந்த வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் இளையராஜா கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்ட விரோதமாக இந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதாலேயே ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

துரிதமாக நடவடிக்கை எடுத்த சேலம் காவல்துறையினரை பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கும் அதே வேளையில், இவ்வளவு வெடி பொருட்களை தைரியமாக தமிழகத்தில் கடத்தும் நிலை வந்துள்ளது கவலைக்குரியது. குறிப்பாக கடந்த வருடம், அக்டோபர் 23ம் தேதியன்று கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே குண்டு வெடித்து ஜமிசா முபீன் என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதி உயிரிழந்தது இன்றளவும் கோவை நகரை பதட்டத்தில் வைத்துள்ள நிலையில், அதே கோவைக்கு இந்த வாகனம் சென்று கொண்டிருந்தது அதிர்ச்சியளிக்கிறது.

காலம் தாழ்த்தாமல் , காவல்துறையினர் இந்த வெடிபொருட்களை சட்ட விரோதமாக எடுத்து செல்ல முயன்ற கும்பலை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவான என அழைக்கப்படும் தமிழகத்தில் சட்ட விரோத வெடிபொருட்கள் வலம் வருவது கடும் கண்டனத்திற்குரியது என நாரயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அரசன் படத்தின் ஹீரோயின் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை!

More in Featured

To Top