Connect with us

சொத்துக்களை இழந்தேன்! ராதிகா சீரியல் எனக்கு கிழவன் என்ற பெயரை கொடுத்தது” – பப்லூ உருக்கம்..

Featured

சொத்துக்களை இழந்தேன்! ராதிகா சீரியல் எனக்கு கிழவன் என்ற பெயரை கொடுத்தது” – பப்லூ உருக்கம்..

நடிகர் பப்லூ தன் வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்தார். “நான் சினிமாவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். எல்லா விதமான போராட்டங்களையும், அவமானங்களையும் சந்தித்துவிட்டேன். ஒரு கட்டத்திற்கு மேலே இது தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, பணம், சொத்து, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன்.

அப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன். அப்போது நண்பர் ஒருவரின் மூலம், வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. ராதிகா தமிழ் சினிமாவின் அவ்வையார். அவருக்கு ஜோடி என்றால் நானும் வயதானவனாகத் தான் இருக்க வேண்டும். அந்த சீரியல் எனக்கு ‘கிழவன்’ என்ற பெயரை வாங்கி கொடுத்தது.

பின், கண்ணான கண்ணே சீரியலில் ‘அப்பா’ கதாபாத்திரத்தில் நடித்தேன். இதனால், ‘பப்லூ அப்பா’ கதாபாத்திரத்துக்கு சரியானவர் என்ற பெயர் ஏற்பட்டது. அதன் பிறகு, 19 படங்களில் என்னை அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். ஆனால், அந்த வாய்ப்புகளை நான் மறுத்துவிட்டேன். பின்னர், ஏஸ் படம் மூலம் நெகட்டிவ் ரோலில் நடிக்க அழைக்கப்பட்டேன். கதை பிடித்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்,” எனத் தெரிவித்தார் பப்லூ.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'சாமி' பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் புகைப்படம் வைரல் – தற்போதைய நிலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

More in Featured

To Top