Connect with us

புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிய விக்ரம்… விலை கேட்டா ஷாக்காகிடுவீங்க!

Featured

புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிய விக்ரம்… விலை கேட்டா ஷாக்காகிடுவீங்க!

திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடம் பிடித்து வரும் முன்னணி நடிகர் சீயான் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் தனது உடலை மாற்றி, கெட்டப்பில் வேறுபாடு கொண்டு நடிக்கிற திறமையான நடிகர்.

காசி, சேது, அந்நியன், கோப்ரா, , தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் தனது உடலை கடுமையாக பயிற்சி செய்து நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த வீர தீர சூரன் படம் வெளியாகி உள்ளது. தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் சிலரே ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்கள். தளபதி விஜய் வைத்திருந்த காரை அண்மையில் விற்றுவிட்டார். நடிகர் தனுஷ் தற்போது வைத்திருக்கிறார். இந்த நிலையில், நடிகர் விக்ரம் ரோல்ஸ் ராய்ஸ் காரின் புதிய மாடலான Spectre காரை வாங்கியுள்ளார். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ. 8 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விக்ரம் வாங்கிய அந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் Spectre கார் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top