Connect with us

சிங்கம் களமிறங்கிருச்சு : CSK அணியுடன் பயிற்சியை தொடங்கினார் எம்.எஸ்.தோனி – வைரல் வீடியோ

Featured

சிங்கம் களமிறங்கிருச்சு : CSK அணியுடன் பயிற்சியை தொடங்கினார் எம்.எஸ்.தோனி – வைரல் வீடியோ

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்தடைந்துள்ள எம்.எஸ்.தோனி தனது அணியுடன் பயிற்சியை தொடங்கியுள்ள வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியில் பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தங்களை ஆயுத்தபடுத்தி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட அணைத்து அணிகளும் பயிற்சினை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பயிற்சியை மேற்கொள்ள சென்னை வந்தடைந்தது .

இந்நிலையில் அம்பணி குடும்பத்தின் திருமண விழாவை முடித்த கையோடு சென்னை வந்தடைந்துள்ள தல தோனி தற்போது தனது அணியுடன் பயிற்சியை தொடங்கி உள்ளார்.

இம்முறை சில வீரர்கள் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் சில மணி நேரம் உரையாடிய தோனி பின்னர் தனது பயிற்சியை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் தோனி பயிற்சி செய்யும் வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு தேர்தல் தடையா? பரபரப்பான திருப்பம்!”

More in Featured

To Top