Connect with us

நெருங்கும் தேர்தல் : படப்பிடிப்புக்கு லீவ் விட்ட கமல்ஹாசன்

Cinema News

நெருங்கும் தேர்தல் : படப்பிடிப்புக்கு லீவ் விட்ட கமல்ஹாசன்

மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க மகமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல மெகா கூட்டணியில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் .

அந்தவகையில் தற்போது தனது 234வது படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் உடன் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா நாட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு செர்பியா செல்லும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் கமல்ஹாசன் தற்போது முழுநேரம் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறாராம் . இதன் காரணமாக தேர்தல் முடியும் வரை தக் லைஃப் படப்பிடிப்பிற்கு கமல்ஹாசன் லீவ் விட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெண் வேண்டத்தில் முழு பாடலுக்கு நடனமாடிய கவின் - இணையத்தை கலக்கும் ஸ்டார் படத்தின் மெல்லடி பாடல்..!!!

More in Cinema News

To Top