Connect with us

இனி வீட்ல பாப்போம் – OTTயில் வெளியாகிறது மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ திரைப்படம்..!!

Cinema News

இனி வீட்ல பாப்போம் – OTTயில் வெளியாகிறது மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ திரைப்படம்..!!

திரையரங்குகளில் சக்கை போடு போட்ட மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ திரைப்படம் விரைவில் OTTயில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மம்மூட்டியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே ‘பிரம்மயுகம்’.

ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது .

கடந்த சில நாட்களுக்கு முன் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று . வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது .

மிக குறைய பட்ஜட்டில் உருவான இப்படம் வெளியாகி 10 நாட்களில் சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் மழை பொழிந்தது .

இந்நிலையில் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட இப்படம் விரைவில் OTTயில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் மார்ச் 15 ஆம் தேதி SONY LIV OTTயில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஜிமிக்கிஸ் கஸல்’ பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top