Connect with us

வசூலில் ரஜினியின் அந்த படத்தை பின்னுக்கு தள்ளிய மஞ்சும்மல் பாய்ஸ் – வெளியான லேட்டஸ்ட் தகவல்..

Cinema News

வசூலில் ரஜினியின் அந்த படத்தை பின்னுக்கு தள்ளிய மஞ்சும்மல் பாய்ஸ் – வெளியான லேட்டஸ்ட் தகவல்..

திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரஜினி நடித்த லேட்டஸ்ட் படத்தின் வசூல் தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.

உண்மை சம்பவத்தை திரைப்படமாக செதுக்கி உள்ள படக்குழு தற்போது இப்படத்தின் வெற்றியை கால் மேல் கால் போடு ருசித்துக்கொண்டிருக்கிறது .

கமல் ஹாசன், தனுஷ், விக்ரம் என தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் பிரபலங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரை நேரில் அழைத்து மனதார பாராட்டி வருகின்றனர் .

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது . இப்படம் தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது .

இப்படம் வெளியாகி குறைந்த நாட்களில் தமிழகத்தில் சுமார் 30 வரை வசூல் செய்ததன் மூலம் ரஜினியின் லால் சலாம் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த லால் சலாம் படம் தமிழ்நாட்டில் ரூ. 20 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சாய் கிஷோர் சுழலில் சிக்கிய பஞ்சாப் - குஜராத் அணி அசத்தல் வெற்றி..!!!

More in Cinema News

To Top