Connect with us

ரொமான்ஸில் பின்னிய லோகேஷ் – ஸ்ருதி – வெளியானது இனிமேல் பாடல்..!!

Cinema News

ரொமான்ஸில் பின்னிய லோகேஷ் – ஸ்ருதி – வெளியானது இனிமேல் பாடல்..!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் காம்போவில் உருவாகியுள்ள “இனிமேல்” பாடல் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தற்போது ரஜினியின் அடுத்த படத்திற்கான பணிகளில் செம பிசியாக இருந்து வருகிறார் .

இதற்கிடையில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் கேட்டுக்கொண்டதன் காரணமாக அவர்களுடன் சேர்ந்து ஒரு ஆல்பம் பாடலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

“இனிமேல்” என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலுக்கு கமல்ஹாசனின் அன்பு மகளான ஸ்ருதிஹாசன் தான் இசையமைத்து இருக்கிறார். இந்த பாடலின் வரிகளை உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் அதீத ஆர்வத்தை தூண்டியுள்ள இந்த கூட்டணியின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த ஆல்பம் பாடலின் டீசர் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் இனிமேல் பாடலின் டீசர் நல்ல வரவேற்பை பெற இந்த முழு பாடலை காண ரசிகர்கள் செம ஆவலாக இருந்தனர்.

இந்நிலையில் இந்த பாடலின் முழு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. வழக்கமான காதல், அவர்களிடையே இணக்கமான ரொமான்ஸ், அதன்பின் வரும் சண்டை, பிரிவு, மீண்டும் இணைதல் என்ற ஃபார்முலாவில் இப்பாடல் உருவாகியுள்ளது.

இதில் சிறுக்கும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்தப் பாடல் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் நம்ப லோகஷ் கனகராஜ். ஆனால், அவருக்கும் ரொமான்ஸுக்கும் ஒரு காத தூரம் இடைவேளி இருப்பது போல தான் தெரிகிறது.

இருப்பினும் இதற்கு முன் இந்த மாறி லோகேஷை நங்கள் பார்த்ததே இல்லை என லோகேஷின் ரசிகர்கள் தற்போது இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த பாடலை நீங்களும் பார்த்து கேட்டு எப்படி இருக்கிறது என்பதை எங்களுடன் கமெண்ட் செக்சனில் பகிருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top