Connect with us

IPL 2024 : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு..!!

Featured

IPL 2024 : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு..!!

நடப்பாண்டுக்கான IPL தொடரில் இன்று நடைபெறும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி தற்போது களத்தில் பேட்டிங் செய்து வருகிறது.

ஏற்கனவே தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதிய பெங்களூரு அணி அதில் தோல்வியை சந்தித்தது . இதுபோல் ராஜஸ்தான் அணியுடன் தனது முதல் போட்டியை சந்தித்த பஞ்சாப் அணி அதில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top