Connect with us

“கார்த்தி 27 படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை! யார் தெரியுமா?!”

Cinema News

“கார்த்தி 27 படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை! யார் தெரியுமா?!”

கார்த்தி நடிக்க இருக்கும் 27 வது திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ’96’ என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம்குமார், கார்த்தி நடிக்க இருக்கும் 27வது படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் ’ஈரமான ரோஜாவே’ என்ற சீரியல் நடிகை சுவாதி, நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உட்பட பல சீரியல் நடிகைகள் வெள்ளி திரையிலும் ஜொலித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சீரியல் நடிகை வெள்ளி திரைக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் முதல் படமே கார்த்தியுடன் ஜோடி என்பது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. பிரேம்குமார் இயக்கத்தில், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தை 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top