Connect with us

ஹீரோவான KPY பாலா… வாங்கிய சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா? உண்மையில் ஹீரோதான்!

Featured

ஹீரோவான KPY பாலா… வாங்கிய சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா? உண்மையில் ஹீரோதான்!

சின்னத்திரையில் “கலக்கப்போவது யாரு” மற்றும் “குக் வித் கோமாளி” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் பாலா. “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், “கேபிஐ பாலா” என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அந்நிகழ்ச்சியில் தனது தனித்துவமான ரைமிங் காமெடியால் அனைவரையும் ரசிக்க வைத்த இவர், பின்னர் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரது நகைச்சுவை திறமைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தனது சம்பாதிப்பைத் தனக்கு மட்டுமே பயன்படுத்தாமல், சமூகத்தில் உள்ள பலரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அவருடைய சமூக பணிகள் பலரால் பாராட்டப்படுகின்றன.

தற்போது, காமெடி நாயகனாக வலம் வந்த பாலா, “காந்தி கண்ணாடி” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்காக அவர் பெற்ற சம்பளத்தை பயன்படுத்தி, இரண்டு குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி வழங்கியுள்ளார். இந்த உயரிய மனப்பான்மையை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொன்ராம் இயக்கிய ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

More in Featured

To Top