Connect with us

தமிழில் தோல்வியடைந்த ‘குபேரா’ படத்தின் உலகளாவிய வசூல் எவ்வளவு தெரியுமா?

Featured

தமிழில் தோல்வியடைந்த ‘குபேரா’ படத்தின் உலகளாவிய வசூல் எவ்வளவு தெரியுமா?

தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தமிழில் வெளியான இப்படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. தற்போது வரை தமிழ்நாட்டில் இப்படம் வெறும் ரூ.23 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

ஆனால் தெலுங்குப் பகுதிகளில் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாபெரும் வெற்றியடைந்த ‘குபேரா’ படத்தின் வெற்றியை நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா, இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் சேர்ந்து கொண்டாடினர்.

இந்த நிலையில் ‘குபேரா’ திரைப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் 13 நாட்களை கடந்துள்ளது. இந்த 13 நாட்களில் ‘குபேரா’ திரைப்படம் உலகளவில் ரூ.134 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top