Connect with us

ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய நடிகை கயாடு லோஹர்: ‘நீங்கள் நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை!

Featured

ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய நடிகை கயாடு லோஹர்: ‘நீங்கள் நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை!

இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். தற்போது அதர்வாவுடன் இணைந்து “இதயம் முரளி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியும் இவர் தான். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் கயாடு லோஹரிடம் ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சிரித்துக்கொண்டே கயாடு லோஹர் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, “இன்றைய தலைமுறை புதுப்புது வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடித்து வருகிறார்கள். எனக்கு தெரிந்தது ‘ஷிப்’ என்றால் கப்பல் தான். நீங்கள் கூறுவது போல் இப்போது ரிலேஷன்ஷிப், சிச்சுவேஷன்ஷிப் என பல ‘ஷிப்’கள் வந்துவிட்டன. நீங்கள் நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை. நான் ரொம்ப நல்ல பொண்ணு. நான் இப்பொது எந்த ஒரு ஷிப்பிலும் இல்லை. அவ்வளவு எளிதாக எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டேன்” என கயாடு லோஹர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  8 நாட்களில் 3BHK திரைப்படம் செய்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top