Connect with us

பிரியங்கா, கோபிநாத் விஜய் டிவியில் இல்லைனா? பிரபலம் கூறிய உண்மை..

Featured

பிரியங்கா, கோபிநாத் விஜய் டிவியில் இல்லைனா? பிரபலம் கூறிய உண்மை..

விஜய் டிவியை கலர்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் நீயா நானா கோபிநாத் விஜய் டிவியில் இருந்து வெளியேறப்போகிறார்கள் என்ற செய்தியும் பரவியது.

மேலும், விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முடிவுகொடுத்து, கலர்ஸ் நிறுவனம் புதிய நிகழ்ச்சிகளை தொடங்க இருக்கிறதென செய்திகள் வந்தன. ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானதாக இல்லை.

இந்நிலையில், பிரபல ஆர்.ஜே ஒருவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியை விட்டு விலகவில்லை. அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஹனிமூனில் உள்ளார். விரைவில் திரும்பி, மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுப்பார் என்றார்.

அதேபோல், கோபிநாதும் விஜய் டிவியில் இருந்து விலகவில்லை என்றும், நீயா நானா நிகழ்ச்சி தொடரும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார். இதன்மூலம், பரப்பப்பட்ட ஊகங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல் நாளில் தக் லைஃப் செய்த சாதனை – எவ்வளவு வசூல் தெரியுமா?

More in Featured

To Top