Connect with us

தொடர் மரணங்கள், படகு விபத்து – காந்தாரா 2 ஷூட்டிங்கில் பரபரப்பு..

Featured

தொடர் மரணங்கள், படகு விபத்து – காந்தாரா 2 ஷூட்டிங்கில் பரபரப்பு..

காந்தாரா படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான காந்தாரா 2 உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து, படக்குழுவினர் பல்வேறு சிக்கல்கள் மற்றும் துயரச் சம்பவங்களை சந்தித்து வருகின்றனர்.

முதலில், நடிகர் கபில், கர்நாடகாவின் சவுபர்ணிகா நதியில் ஷூட்டிங் நடைபெறும்போது தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழுவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பின், ராகேஷ் புஜாரி என்ற மற்றொரு நடிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதற்குப் பிறகு, விஜூ விகே என்ற நடிகர், தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவங்கள் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தபோதும், மேலும் ஒரு விபத்து தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் 30 பேர் பயணித்த படகு, கர்நாடகாவின் ஷிவமோகா பகுதியில் உள்ள ஒரு நீர்த்தேக்கத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அந்த பகுதியில் ஆழம் அதிகமாக இல்லாததால் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இவ்வாறு, தொடர்ச்சியான மரணங்கள் மற்றும் விபத்துகள் காந்தாரா 2 படக்குழுவை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரு வருடத்தை கடந்த ‘இந்தியன் 2’ – வசூல் விவரம் வெளியாகியது!

More in Featured

To Top