Connect with us

தமிழை விட்டுக் கொடுத்து மன்னிப்பு கேட்காத கமல்ஹாசனுக்கு இணையவாசிகள் சப்போர்ட்!

Featured

தமிழை விட்டுக் கொடுத்து மன்னிப்பு கேட்காத கமல்ஹாசனுக்கு இணையவாசிகள் சப்போர்ட்!

நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசையில் உருவான இந்த திரைப்படம், இசை வெளியீட்டு விழா நிகழ்விலேயே கருத்து சர்ச்சைக்கு உட்பட்டது.

அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தை மேற்கோளாக கூறினார். இதனை தொடர்ந்து கர்நாடக மாநில முதல்வர், துணை முதல்வர், பல அரசியல் தலைவர்கள், கன்னட திரைப்படத் துறை பிரதிநிதிகள் மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அவர்கள், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால்தான் படம் கர்நாடகாவில் வெளியிடப்படும் என்றும், இல்லையெனில் படம் தடுப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே மன்னிப்பு கேட்பதற்கான அவசியமில்லை. அன்பு மன்னிப்பும் கேட்க முடியாது,” என உறுதியாகக் கூறினார்.

இந்த நிலைமைக்கு மேலதிக பரபரப்பை ஏற்படுத்தியது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையாகும். அவர்கள், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டல் தொனியில் காலக்கெடு விதித்தனர். ஆனால், கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சமூக வலைதள பயனர்கள், கமல்ஹாசனுக்கு வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அவர்களது கூற்று: “கமல்ஹாசன் வரலாற்று உண்மையை மட்டுமே கூறியுள்ளார். கர்நாடக அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்றம் அழுத்தம் கொடுத்தும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. இது தான் உண்மையான தைரியம்.”

மேலும், அவர்களது கருத்துப்படி, “‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவில் வெளியானால், அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் வரை வசூலிக்க வாய்ப்பு உண்டு. இருந்தும் கமல்ஹாசன், வரலாற்று உண்மையை மறுப்பதைவிட படம் வெளியீட்டை இழப்பதையே தேர்ந்தெடுத்துள்ளார்.பணம், புகழ் இவைகளை விட தமிழ் மொழியின் பெருமை, வரலாற்று அடையாளம் அவருக்கு முக்கியம். இதனாலேயே அவர் இன்னும் பெரிய மனுஷனாக தெரிய வந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மற்றொரு பார்வை: “துறவிக்கும் சொந்த ஊர் பற்று இருக்கும்” என்ற பழமொழியை மேற்கோளாகக் கூறி, சினிமாவை தன் வாழ்வாகக் கொண்ட கமல்ஹாசனுக்கு தமிழ் மீதான பற்று இருக்காதா என்று கேட்கின்றனர். ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் ஆகியோர் மன்னிப்பு கேட்டதுபோல், கமலையும் மன்னிப்பு கேட்க வைக்கலாம் என சிலர் நினைத்தாலும், கமல் முற்றிலும் மாறானவர் என்பதை அவர்கள் உணரவில்லை என்பதே இணையவாசிகளின் கூற்று.

See also  விஜய்யின் 'ஜனநாயகன்' பட விநியோக உரிமை: அவர் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top