Connect with us

கமல்ஹாசனுக்கு மூளை பரிசோதனை செய்ய வேண்டும் – அண்ணாமலை கடும் விமர்சனம்

Featured

கமல்ஹாசனுக்கு மூளை பரிசோதனை செய்ய வேண்டும் – அண்ணாமலை கடும் விமர்சனம்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு உடனே மூளை பரிசோதனை செய்ய வேண்டும் தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் இன்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை கூறிருப்பதாவது :

நாக்பூர் இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்படும் என்ற கமலஹாசன் பேசியது குறித்து பரப்புரையில் கருத்து தெரிவித்த அண்ணாமலை கமல்ஹாசன் அவர்களுக்கு உடனே மூளை பரிசோதனை செய்ய வேண்டும் வேண்டும் அவர் சுய நினைவோடு தான் இருக்கிறாரா என்பதை மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவிற்கு கமல்ஹாசன் விற்று விட்டார் என கடுமையாக விமர்சிக்கும் வகையில் அண்ணாமலை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் கூறிருக்கிறார் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முன் சாலை வசதி ஏற்படுத்தி தாருங்கள்; கிரிக்கெட் மைதானம் அமைக்க பிசிசிஐயிடம் நாங்கள் நிதி வாங்கி தருகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Villain Role இல்ல!” 👀 | ‘Benz’ பட ரகசியத்தை உடைத்த Nivin Pauly 😮🔥

More in Featured

To Top