Connect with us

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லையா? மகளின் உண்மை விளக்கம்..

Featured

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லையா? மகளின் உண்மை விளக்கம்..

ஒரு படம் உருவாகி வெளியானதுடன், அதன் முன்னணி நடிகர்களுக்கு மட்டும் அல்லாமல், பின்னால் பணிபுரியும் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த வழியில், பாடகர்களும் மிகுந்த திறமையுடன் பாடல்கள் ஹிட் ஆகுமென்று பலருக்கு தெரிய வருகிறது. ஒரு ஹிட் பாடலைப் பாடி பிரபலமாகப் போனவர் கல்பனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி இருக்கிறார்.

ஆனால், நேற்று மார்ச் 4-ந்தேதி, இவர் தனது ஹைதராபாத் வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கல்பனா சுயநினைவுக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கல்பனாவின் மகள் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது, “என் அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை. அவர் எடுக்கும் மாத்திரையில் கொஞ்சம் Over Dose ஆகிவிட்டது. எங்களுடைய குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. தவறான செய்திகளை பரப்பாதீர்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கூலி திரைப்படம் தள்ளிப்போகுமா? ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி..

More in Featured

To Top