Connect with us

அனிதா விஜயகுமாரின் நெகிழ்ச்சி: மருத்துவத்துறையை விட முக்கிய காரணம்..

Featured

அனிதா விஜயகுமாரின் நெகிழ்ச்சி: மருத்துவத்துறையை விட முக்கிய காரணம்..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமார், இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரின் குடும்பமே சினிமாவில் இருந்து வந்தவர்கள். ஆனால், இவருடைய இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார், நடிப்புக்கான வாய்ப்பு வந்த போதும், அதை ஏற்றுக்கொள்ளாமல், மருத்துவத்துறையை தேர்வு செய்தார். 15 ஆண்டுகள் எமர்ஜென்சியில் பணியாற்றிய பின்னர், தற்போது சென்னையில் செட்டில் ஆகிறார்.

அனிதா விஜயகுமார் இதன் காரணம் பற்றி பகிர்ந்துள்ளார். “நான் முதலில் மருத்துவராக இருக்க விரும்பினேன். எனக்கு தேவையான அனைத்தையும் என் அப்பா, அம்மா செய்து தந்தார்கள். 15 ஆண்டுகள் எமர்ஜென்சியில் பணியாற்றினேன். பலர் உயர் நிலைக்கு செல்வதற்காக குடும்பத்தைக் கவனிப்பதில் குறையுவார்கள். ஆனால், எனக்கு பணம் அல்ல, உறவுகள் தான் முக்கியம். அதனால் என் வேலையிலிருந்து ஓய்வு எடுத்தேன். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குடும்பத்துடன் நேரம் கழிக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் குட் பேட் அக்லி & விஜய் ஜனநாயகன்: புதிய அறிவிப்பு!

More in Featured

To Top