Connect with us

மம்முட்டி – ஜோதிகாவின் காதல் பயணமா??இல்லை அரசியல் கதையா!

Cinema News

மம்முட்டி – ஜோதிகாவின் காதல் பயணமா??இல்லை அரசியல் கதையா!

மம்மூட்டி – ஜோதிகா இணைந்து நடித்துள்ள மலையாள படமான காதல் தி கோர் திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது…இந்த ட்ரைலர் வந்தது முதல் இப்போது வரை வைரலாக பேசப்பட்டு வருகின்றது..

கடந்த 2021-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான மலையாள படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’…இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது…இப்படத்தை இயக்குநர் ஜியோ பேபி என்பவர் தான் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள புதிய படம் காதல் தி கோர் மம்மூட்டியுடன் நடிகை ஜோதிகா இணைந்து நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.படத்துக்கு மாத்யூஸ் புலிக்கன் இசையமைத்துள்ளார்..இது மிகவும் அதிகமாக பேசப்படும் என்று தெரிகிறது…இந்த ட்ரைலர் வந்தது முதல் வைரல் ஆகி வருகின்றது..

இந்த ட்ரைலரில் மம்மூட்டி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புகளும்,சிக்கல்களும் எழுகிறது அதனை போல இடையில் வழக்கு ஒன்றில் அவர் சிக்கியிருப்பதாகவும் காட்சிகள் வந்து செல்கின்றது…யாரிடமும் அதிகம் பேசாத சுபாவம் கொண்டவர் என தன்னைப் பற்றி குறிப்பிடுகிறார் மம்மூட்டி…இப்படி சுவாரசியமாக சொல்வது போல அமைந்து இருக்கின்றது…

சில காட்சிகளில் வந்து செல்லும் ஜோதிகாவுக்கு ஒரு வசனமும் இல்லை…இவர்களுக்குள் என்ன ஆகும் என கதை நகரும் என தெரிகிறது பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க போகிறது என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top