Connect with us

“திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாகும் நடிகர் கமல்ஹாசனின் திரைப்படம்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!”

Cinema News

“திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாகும் நடிகர் கமல்ஹாசனின் திரைப்படம்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!”

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மீண்டும் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஆளவந்தான்’. ரூ.25 கோடி பட்ஜெட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை மீண்டும் டிஜிட்டலில் உருவாக்கி ரீரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள் திட்டமிட்டு இருந்தாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’ஆளவந்தான்’ வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரீ ரிலீஸ் குறித்த விளம்பரம் வெளியாகி உள்ளது.

அதில் ’எழிலோடும் பொலிவோடும் விரைவில் உலகம் எங்கும் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்துள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ’வேட்டையாடு விளையாடு’ சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’ஆளவந்தான்’ படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  PBKS VS RR : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு..!!

More in Cinema News

To Top