Connect with us

“தளபதி 68 படம் Hollywood படத்தின் ரீமேக்கா?! லேட்டஸ்ட் Viral தகவல்!”

Cinema News

“தளபதி 68 படம் Hollywood படத்தின் ரீமேக்கா?! லேட்டஸ்ட் Viral தகவல்!”

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் ’ஹிஸ்ட்ரி ஆப் வயலன்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் நடித்துவரும் ’தளபதி 68’ படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்த நிலையில் மூன்றாம் கட்டப்பட்ட படிப்பை தற்போது மீண்டும் சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆன ஹாலிவுட் திரைப்படமான ’லூப்பர்’ என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் அவருடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இழிவான முறையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி - செல்வப்பெருந்தகை விமர்சனம்

More in Cinema News

To Top