Connect with us

மலேசியாவில் இத்தனை கோடிக்கு விற்பனையானதா ‘ஜனநாயகன்’? ரெக்கார்ட் பிரேக் செய்த தளபதி விஜய்!

Featured

மலேசியாவில் இத்தனை கோடிக்கு விற்பனையானதா ‘ஜனநாயகன்’? ரெக்கார்ட் பிரேக் செய்த தளபதி விஜய்!

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜனநாயகன்” தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம், விஜய்யின் சினிமா வாழ்க்கையின் கடைசி திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால் அவர் சினிமாவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு இணையாக, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு கேமியோ தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படக்குழுவின் அறிவிப்பின்படி, “ஜனநாயகன்” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதற்குமுன்பே ப்ரீ பிசினஸ் வட்டாரங்களில் இப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, OTT மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மிகுந்த தொகைக்கு விற்பனையாகியுள்ளன.

இந்நிலையில், “ஜனநாயகன்” திரைப்படத்தின் மலேசியா திரையரங்க உரிமை ரூ.12 கோடிக்கு விற்பனையானது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனையாக கருதப்படுகிறது. வெளிநாட்டு மார்க்கெட்டில் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு, தளபதி விஜய்யின் புகழையும் வணிகவிழாக்கத்தையும் மேலும் உயர்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அகில் திருமண வரவேற்பில் மகேஷ் பாபு அணிந்த டி-ஷர்ட் விலை இத்தனை லட்சமா?

More in Featured

To Top