Connect with us

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டது மம்பட்டியான் பாடல் – என கூறும் தியாகராஜன்..

Featured

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டது மம்பட்டியான் பாடல் – என கூறும் தியாகராஜன்..

பழைய திரைப்படங்களின் ஹிட் பாடல்களைப் புதிய படங்களில் பயன்படுத்தும் நடைமுறை தமிழ் சினிமாவில் தற்போதைய ஒரு முக்கியமான போக்காக உருவெடுத்து வருகிறது. இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் படங்களில் இதனைச் செய்து, ரசிகர்களிடையே nostalgiya உணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

2011ஆம் ஆண்டு வெளியான “மம்பட்டியான்” திரைப்படத்தை இயக்குநர் தியாகராஜன் இயக்கி தயாரித்தார். இப்படத்தில் அவரது மகன் பிரஷாந்த் நடித்தார். இசையமைப்பாளராக தமன் பணியாற்றியிருந்தார். இதில் இடம்பெற்ற ‘மலையுரு நாட்டாம’ எனும் டைட்டில் பாடல், அந்த காலத்திலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த பாடல் சமீபத்தில் வெளியான “டூரிஸ்ட் பேமிலி” என்ற திரைப்படத்தில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. அந்த பாடல் திரையரங்கில் ஒலிக்கும்போது, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தக் கணம் கூட திரையரங்குகள் அதிர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில், “டூரிஸ்ட் பேமிலி” படத்தில் “மம்பட்டியான்” பாடல் பயன்படுத்தப்பட்டதற்காக நீங்கள் எந்தவிதமான வசூல் கேட்டீர்களா என தியாகராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குத் தியாகராஜன் அளித்த பதில் பெருமைமிக்கதுமானது. அவர் கூறியது.

“மம்பட்டியான் படத்தின் பாடலை அவர்கள் அனுமதி இல்லாமலே பயன்படுத்தினாங்க. பலரும் என்னிடம், ‘வழக்கு போடுங்க’, ‘பணம் கேளுங்க’ என்று சொன்னாங்க. ஆனா எனக்கு அப்படி செய்வது தேவையில்லை என்று தோன்றிச்சு. அந்தப் பாடல் மறுபடியும் ஹிட் ஆனதுக்காக நான்தான் அவர்களுக்கு காசு கொடுக்கணும்!”தியாகராஜனின் இந்த பதில், அவருடைய உயர்ந்த மனப்பான்மையையும், கலையின் மீதான அவருடைய அன்பையும் தெளிவாக காட்டுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல் நாளில் தக் லைஃப் செய்த சாதனை – எவ்வளவு வசூல் தெரியுமா?

More in Featured

To Top