Connect with us

டேட்டா ஹேக்கிங்கில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர்கள் கைது..!!

Featured

டேட்டா ஹேக்கிங்கில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர்கள் கைது..!!

பிரபல ஐடி நிறுவனத்தில் உள்ள டேட்டாகளை அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ஐடி ஊழியர்களை திருடி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கி வந்த பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் AWS அக்கவுண்டை சிலர் ஹேக் செய்துள்ளதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த ஹாக்கிங்கில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்த நிலையில்அந்த மென்பொருள் நிறுவனத்தில் ஈடுபட்டிருந்தவர்களே இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

வேலை பார்த்த நிறுவனத்திலேயே தரவுகளை திருடியதாக ஐடி ஊழியர்கள் எடிசன், ராம்குமார், காவ்யா, ரவிதா, கருப்பையா ஆகியோர் சைபர் கிரைம் போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இதுபோன்ற டேட்டா ஹேக்கிங் சம்பவம் எங்காவது நடந்தால் உடனே 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் போலீசாரிடம் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top