Connect with us

நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற கொள்ளையர்கள் கைது..!!

Cinema News

நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற கொள்ளையர்கள் கைது..!!

சென்னையில் உள்ள நடிகை சோனா வீட்டில் நள்ளிரவில் திருட முயன்று தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனா . இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மதுரவாயலில் உள்ள தனது வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் கத்தியுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக நடிகை சோனா கடந்த இரு நாட்களுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் மர்ம நபர்கள் இருவர் தனது வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து, வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். அப்போது, நாங்கள் வளர்க்கும் நாய் அவர்களைப் பார்த்து குரைக்கவே, சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தோம்.

எங்களை பார்த்ததும் இரண்டு கொள்ளையர்களும் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டினர் . இதையடுத்து நங்கள் கூச்சலிட்டதும் எங்களை விட்டு அவர்கள் தப்பி சென்றுவிட்டதாக சோனா கொடுத்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது .

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை சேகரித்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

இந்நிலையில் சென்னை மதுரவாயலில் உள்ள நடிகை சோனா வீட்டின் சுவர் ஏறி குதித்து கத்தியை காட்டி மிரட்டிய லோகேஷ் (21), சிவா (23) ஆகிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் திருடும் நோக்கில் சுவர் ஏறி குதித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் கிடுக்குபிடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top