Connect with us

திராவிட சாயலில் பயணிக்கிறாரா விஜய்..? – தமிழிசை விமர்சனம்..!!

Featured

திராவிட சாயலில் பயணிக்கிறாரா விஜய்..? – தமிழிசை விமர்சனம்..!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திராவிட சாயலில் பயணிப்பது போல் தெரிகிறது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது :

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதை போல் தெரிகிறது. திராவிட சாயலில் வேறொரு கட்சி தமிழகத்திற்கு தேவையில்லை. விஜய் மாற்றி பயணிப்பார் என நினைத்தேன். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்.

விஜய்யின் சாயம் வெளுக்கிறதா அல்லது வேறு ஒரு சாயத்தை பூசப்போகிறாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம். தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்? சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய்விட்டார்.

திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு எப்படி மதுவிலக்கை பற்றி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்? என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்ட தமன் – தெலுங்கு திரையுலகில் என்ன பிரச்சனை?

More in Featured

To Top