Connect with us

தமிழகத்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

Featured

தமிழகத்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு வருகிறது . இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள் தான் என பல கருத்துக்கள் இணையத்தில் உலா வருகிறது.

அந்தவகையில் தற்போது தமிழகத்தில் உள்ள 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

  • ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம்
  • சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள் நியமனம்
  • தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம்
  • TANGEDCO நிறுவனத்தின் ஐ.ஜி. ஆக பிரமோத் குமார் நியமனம்
  • மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆக தமிழ்சந்திரன் நியமனம்
  • சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்
  • கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம்
  • மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி நியமனம்
  • திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக பிரதீப் நியமனம்
  • சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்
  • கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆக சமய் சிங் மீனா நியமனம்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top